25 Jun 2025
Credit: Freepik
முட்டையில் ஒட்டுமொத்தமாக சுமார் 6.3 கிராம் அளவிற்கு உடலுக்குத் தேவையான புரதச்சத்து (Protein) நிறைந்துள்ளது
முட்டையின் வெள்ளைக்கருவில் மட்டும் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் ஜிங்க் உள்ளிட்ட 11 தாதுக்கள் அடங்கியுள்ளன.
முட்டையின் மஞ்சள் கருப்பகுதியில் உடலுக்கு இன்றியமையாத வைட்டமின் டி, பி 12 மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன.
நாம் முட்டையை நன்றாக அவித்து சாப்பிடும் போது அதிலிருக்கும் 90 சதவீத புரதச்சத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.
அவித்த முட்டையானது செரிமானத்திற்கும் எளிதானது என்பதால் நமது உடலுக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடியதாக அமைகிறது.
முட்டையைப் பச்சையாக அப்படியே குடிக்கும் போது அதிலிருந்து வெறும் 50 சதவீத புரதச்சத்து மட்டுமே உடலிற்குப் போய் சேருகிறது.
முட்டையில் இயற்கையாகவே 'சால்மோனெல்லா' (Salmonella) என்று அழைக்கப்படும் ஒரு வகையான பாக்டீரியா கிருமி கலந்திருக்கிறது.
பச்சை முட்டையைக் குடிக்கும் போது அதிலுள்ள சால்மோனெல்லா கிருமி அழியாமல் அப்படியே நமது உடலுக்குள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்கள் பச்சையாக முட்டையைக் குடிப்பதை தங்களது ஆரோக்கியத்தின் நலன் கருதி முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பச்சை முட்டையில் இருக்கும் கிருமிகள் கர்ப்ப காலத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் தேவையற்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.