14 Jan 2026
Credit: Social Media
மத்திய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வருகிற பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இந்த 2026 பட்ஜெட் வரிகள் தொடர்பான மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அரசின் கடன், நிதிச் சீரமைப்பு, புதிய திட்டங்கள் மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஜிஎஸ்டி வரி விகிதங்கள் பட்ஜெட்டில் அல்லாமல், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் மாற்றப்படுகின்றன.
2026 பட்ஜெட்டில் என்ன முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலாவதாக, இனிமேல், கடன் குறைப்பு ஒன்றே பட்ஜெட்டின் இலக்கே மையமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இரண்டாவதாக, மாநில அரசுகளுடன் மத்திய அரசின் நிதி பகிர்வு முறையில் மாற்றங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் கட்டுப்பாடு, மாநிலங்களுக்கு நிதி பகிர்வு ஆகியவற்றை நிர்ணயிக்கும் முக்கிய பட்ஜெட்டாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
நேரடி வரி முறையிலும் இந்தியா தற்போது நிலையான வரி கொள்கையை பின்பற்றி வருகிறது.
இந்த ஆண்டு பெரிய மாற்றங்கள் வரும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.