20 Mar 2025
Credit: Freepik
பலரும் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு சோர்வும் ஏற்படுகிறது.
இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், நிம்மதியாக தூங்குவது மிகவும் கடினமானது.
மக்கள் இரவு வெகுநேரம் விழித்திருப்பதால், அவர்களால் விரைவாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
தூக்கமின்மையும் உடல் நலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதன்படி, விரைவாக தூங்குவதற்கான குறிப்புகளை அறிவோம்.
உறங்குவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு செல்போன், லேப்டாப் மற்றும் டிவியை அணைக்கவும்.
தினமும் ஒரே நேரத்தில் உறங்க சென்று, ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தை அமைத்து கொள்ளுங்கள்.
படுக்கையறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும் அமைதியாகவும் வைத்து கொள்ளுங்கள்.
இரவு 6 மணிக்கு மேல் டீ, காபி அல்லது காரமான உணவுகளை தவிர்க்கவும். இது செரிமானம் ஆகும் நேரத்தை குறைத்து, தூக்கத்தை பாதிக்கும்.
ஆழ்ந்த தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்வது விரைவாக தூங்க உதவும்.
இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், நன்றான தூக்கத்தை பெறலாம்.