28 OCT 2026

Credit: Getty

சார்ஜ் செய்யும்போது இந்த சிக்கல்கள் ஏற்படலாம் : உஷார்!

ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதில் சார்ஜ் இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. 

ஸ்மார்ட்போன்

ஒருவேளை மொபைல் போனில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போனால், பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

சார்ஜ்

எனவே தான், மொபைல் போனை அவ்வப்போது சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. 

மொபைல் சார்ஜ்

அவ்வாறு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதில் தான் பலரும் தவறுகளை செய்கின்றனர். அதில் முக்கியமான தவறு தான் சார்ஜர் சூடாவது.

சார்ஜ் சூடாவது

மொபைல் போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என நினைக்கும் நபர்கள், அதில் உள்ள சிக்கல்கள் குறித்து கவலைக் கொள்வதில்லை.

சிக்கல்கள்

சாதாரணமாக ஒரு மின்சாதனம் பயன்படுத்தும்போது சற்று வெப்பமாக இருப்பது ஒரு இயல்பான விஷயம் தான். 

குறைந்த வெப்பம்

ஆனால், எந்தஒரு மின்சாதன பொருள் தொட்டாலே சுடும் அளவுக்கு அதிக வெப்ப தன்மை கொண்டு இருந்தால் அது ஆபத்து. 

அதிக வெப்பம்

நீங்கள் உங்களது மொபைல் போனை சார்ஜ் செய்துக்கொண்டு இருக்கும்போது, சார்ஜரில் இருந்து பிளாஸ்டிக் கருகும் வாடை அடித்தால் கவனமாக இருக்க வேண்டும்.

கருகுதல்

இதுவே சார்ஜரில் இருந்து புகை வந்தால் சற்றும் தாமதிக்காமல் போர்டில் இருந்து சார்ஜரை கழட்டி, மொபைல் போனை எடுத்துவிட வேண்டும்.

நடவடிக்கை

இத்தகைய சூழல்களில் சார்ஜர்கள் வெடிப்பது, தீ விபத்து ஏற்படுவது உள்ளிட்ட ஆபத்துகள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. 

ஆபத்துகள்