03 SEP 2026
Credit: GETTY
தீபாளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகை காலம் வந்துவிட்டாலே ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் குவிந்து கிடக்கும்.
பண்டிகை காலங்களின் போது அதிகப்படியான விற்பனை நடைபெறும் என்பதால் நிறுவனங்கள் இந்த யுக்தியை கையாளுகின்றன.
இந்த சூழலில் தான் கையில் பணமே இல்லை என்றாலும் கூட, பலரும் மாத தவணை முறையில் பொருட்களை வாங்கி குவிக்கின்றனர்.
No Cost EMI எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவதன் காரணமாக, பலரும் மிகவும் லாபகரமாக இருக்கும் என நினைத்து பொருட்களை வாங்கிவிடுகின்றனர்.
ஆனால், நீங்கள் நினைக்கும்படி No Cost EMI சிறப்பான அம்சம் இல்லை. அதற்கு பின்னால் பல்வேறு வணிக தந்திரங்கள் மறைந்துள்ளன.
வழக்கமாக நாம் ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால் அதற்கு சிறப்பு சலுகைகள், கேஷ் பேக் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படும்.
ஆனால், இந்த No Cost EMI அம்சத்தில் அத்தகைய எந்த சிறப்பு அம்சங்களும் வழங்கப்படாது. அந்த தள்ளுபடிகளை வைத்து தான் அவர்கள் வங்கிக்கு வட்டி செலுத்துவர்.
உதாரணமாக நீங்கள் ஒரு ஸ்மார்ட் டிவி வாங்க நினைக்கிறீர்கள். அதன் விலை ரூ.46,000 என்றால் மாத தவணை செலுத்தி வாங்கும் பட்சத்தில் நீங்கள் ரூ.50,000 செலுத்த வேண்டும்.
அதாவது மாத தவணை முறையில் நீங்கள் செலுத்தும் அந்த ரூ.4,000 தான் நீங்கள் செலுத்தும் வட்டி ஆகும்.
இதனை தெரியாமல் பலரும் No Cost EMI என்ற ஒற்றை வார்த்தையை நம்பி அந்த பொருளை வாங்கிவிடுகின்றனர்.