04 SEP 2026
Credit: GETTY
வங்கிகளில் வீட்டு கடன், வாகன கடன் என எது வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படை தேவையாக உள்ளது தான் சிபில் ஸ்கோர்.
இந்த சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான் ஒருவருக்கு கடன் வழங்கலாமா, எந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கலாம் என்பதை வங்கிகள் முடிவு செய்யும்.
சிபில் ஸ்கோர் என்பது எதுவுமில்லை. நீங்கள் முன்பு வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியுள்ளீர்களா என்பதற்கான மதிப்பெண் தான் அது.
பணத்தை திருப்பி செலுத்தாது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உங்கள் சிபில் ஸ்கோர் மிக கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும்.
நீங்கள் ஏற்கனவே கடன் பெற்று அந்த கடனுக்காக மாத தவணையை தவறவிட்டாலோ அல்லது தாமதமாக செலுத்தினாலோ கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும்.
உங்களது கிரெடிட் ஸ்கோர் ரூ.1 லட்சம் லிமிட் கொண்டது என்றால் அதில் ரூ.90,000 வரை செலவு செய்வது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் அதிக செலவு செய்யும்போது, நீங்கள் அதிக கடன் பெறும் நபர் என வங்கிகள் உங்களை நினைக்கும். அது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நீங்கள் பாதிப்படையாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும் என்றால் வெறும் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒரு கடனுக்கு விண்ணப்பித்து அது நிராகரிப்பட்டால், அடுத்த கடனை இடைவெளி விட்டு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும்.
கிரெடிட் கார்டு கடன், பாதுகாப்பற்றதாக கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிகம் அத்தகைய கடன்களை வைத்திருந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.