08 Jun 2025
Credit: Freepik
காலையில் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை.
ஊறவைத்த வேர்க்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது தசைகளை உருவாக்கவும், உடல் செல்களை சரிசெய்யவும் உதவுகிறது.
வேர்க்கடலையை ஊறவைப்பதால் அவற்றிலுள்ள சில ஊட்டச்சத்து எதிர்ப்பிகள் குறைந்து, அவை எளிதில் செரிமானம் ஆகும்.
வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
கடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, அதிக உணவு உண்பதை குறைக்கும்.
அளவோடு உட்கொள்ளும்போது, இது பசியை கட்டுப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
வேர்க்கடலையில் எலும்புகளின் வலிமைக்கு அவசியமான பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளன.
மாவுச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவை உடலுக்கு நல்ல ஆற்றலை தரும்.
நார்ச்சத்தும், புரதமும் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும். இருப்பினும் அளவோடு சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் சரும செல்களை பாதுகாக்கும்.