26 July 2026

நடிப்பதை தள்ளிவைக்கும் ஸ்ரீலீலா.. இதுதான் காரணமா?

Credit: Instagram

தனது இளம் வயதிலே 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்துவரும் ஒரு சிறப்பான நடிகைதான் ஸ்ரீலீலா. 

இவர் கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 14ம் தேதியில் அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளி ஆவார். 

ஸ்ரீலீலா கடந்த 2019ம் ஆண்டில் கிஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 

பின் தெலுங்கில் பெல்லி சந்தடி என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார். 

இவ்வாறு தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களை தனது நடனத்தின் மூலம் கவர்ந்துவந்தார். 

இந்த வரிசையில் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பராசக்தி படம் மூலம் அறிமுகமானார். 

சினிமாவில் நடிகையாக இருந்தாலும், இவர் ஒரு மருத்துவர் ஆவார். 

இவர் தனது மருத்துவ படிப்பையும் நடிகையும் சிறப்பாக கையாண்டுவருகிறார். 

இந்நிலையில் இவர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட காரணம் தெரியுமா?

இவர் தற்போது MBBS இன்டெர்ன்ஷிப் செய்கிறாராம். மேலும் MD படிப்பிற்கான நீட் தேர்வுக்கு தயாராகிவருகிறாராம்.