21 Nov 2026

எலுமிச்சையின் அசாத்திய ஆரோக்கிய நன்மைகள்..!

Credit: Freepik

எலுமிச்சையை புளிப்பு என்று சொல்லுவதற்கு முன், அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வது முக்கியம்.

புளிப்பு

எலுமிச்சை மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று. அதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

நன்மைகள்

எலுமிச்சையை ஊறுகாய், சர்பத் மற்றும் லெமன் சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஊறுகாய்

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், பிளாவனாய்டுகள் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்டவை உள்ளன.

வைட்டமின் சி

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு

எலுமிச்சை சாறு உமிழ்நீர் மற்றும் செரிமான சாறுகளின் உற்பத்தியை அதிகரித்து, செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது.

செரிமானம்

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான இரும்பை உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது.

எலுமிச்சை

இது இரத்த அழுத்தம் மற்றும் அழற்ஜியை கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவித்து, பொலிவை கொடுக்கும்.

சிறுநீரக கற்கள்

எலுமிச்சையை சாற்றில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குடிப்பது வாயு உள்ளிட்ட தொல்லையையும் சரிசெய்யும். 

வாயு