26 SEP 2026
Credit:unsplash
மெனிகியூர் செய்த பிறகு நகங்கள் மெலிந்து வலித்தால், அது நகங்கள் சேதமடைந்துள்ளதன் அறிகுறியாகும்.
நகத்தின் மேல்பகுதியை அதிகமுறை ஃபைலிங் செய்து தேய்ப்பதால் Keratin புரத அடுக்குகள் குறைந்து நகங்கள் உடையும்.
ஜெல் பாலிஷை வலுக்கட்டாயமாக உரித்து எடுப்பது இயற்கை நகத்தின் அடுக்குகளைப் பிடுங்கி சேதப்படுத்தும்.
நகச்சுற்று தோலான கியூட்டிகலை அளவுக்கு அதிகமாக வெட்டுவது கிருமித்தொற்றுக்கு வழியமைக்கும்.
ஜெல் தயாரிப்புகளில் உள்ள ரசாயனங்கள் தோலில் பட்டால் அரிப்பு மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
ஜெல் பாலிஷைக் காயவைக்கும் UV/LED விளக்குகளின் கதிர்வீச்சிலிருந்து தப்ப சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
நகங்களின் ஆரோக்கிய நிலையைப் பொறுத்து சரியான மெனிகியூர் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நகங்கள் இயல்புநிலைக்கு மீண்டு வர மெனிகியூர் செய்யாமல் சில காலம் ஓய்வு தருவது அவசியம்.
சேதமடைந்த நகம் முற்றிலும் புதிதாக வளர்ந்து வர தோராயமாக ஆறு மாதங்கள் ஆகும்.
நகங்களில் வலி, வீக்கம் அல்லது நிறமாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.