04 OCT 2026
Credit: Getty
தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது.
அவர்கள் பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக தங்களது அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
சிறுவர்கள் சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்த தெரியாமல் அதில் இருக்கும் ஆபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.
குறிப்பாக மோசடிகள் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு சிறுவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பலியாகின்றனர்.
இந்த நிலையில் தான், பல்வேறு உலக நாடுகள் 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா சமீபத்தில் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள நிலையில், இதர நாடுகள் விரைவில் இதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன.
இந்த நிலையில் தான், இந்தியாவிலும் 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த சமூக ஊடக பயன்பாடு சிறப்பானதாக இருந்தாலும், அது டீனேஜர்கள் மத்தியில் உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.