15 Jan 2026

2026 பட்ஜெட்டில் நகைக்கடனில் வரும் முக்கிய மாற்றங்கள்?

Credit: pexels

2026ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமைத் துறை அந்தஸ்து வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

நகைக் கடன்கள் சிறு கடன் வாங்குபவர்களால் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, பெரும்பாலான நகைக் கடன்கள் ரூ. 50,000-க்கும் குறைவாகவே உள்ளன.

நகைக் கடன்கள் பொதுவாக மருத்துவச் செலவுகள், கல்வி, விவசாயத் தேவைகள் அல்லது சிறு தொழில்களுக்கான நடைமுறை மூலதனத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

தகுதியுள்ள நகைக் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமைத் துறை அந்தஸ்தை வழங்குவது, வங்கிகளின் நிதிச் செலவைக் குறைத்து, குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க உதவும் எனக் குறப்படுகிறது.

இது முறையான நிதி வசதிகள் குறைவாக உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கடன் கிடைப்பதை விரிவுபடுத்தும்.

UPI இந்தியாவின் பணம் செலுத்தும் முறையை மாற்றியமைத்துள்ளது, எனினும் அதன் மூலம் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் குறைவாகவே உள்ளன.

UPI வழியாகத் தங்கம் சார்ந்த கடன் வரம்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், தனிநபர்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து, UPI செயலிகள் வழியாக நேரடியாக ஒரு சுழல் கடன் வரம்பை அணுகலாம்.

தேவைக்கேற்ப உடனடியாகப் பணம் எடுக்கவும் இது அனுமதிக்கும். வட்டி விகிதங்கள் பொதுவாக 12-18% வரம்பில் இருப்பதால், இத்தகைய கடன் பல பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டுகளை விட மிகவும் மலிவானதாக இருக்கும்.

தங்கக் கடன்களின் நம்பிக்கையையும் UPI-யின் பரவலான பயன்பாட்டையும் இணைப்பது, கடன் வாங்குவதை எளிதாக்கும்,

அதிக வட்டியுள்ள கடன்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கும்.