30 September 2026
Credit: Instagram
தெலுங்கு சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஜும்மண்டி நாதம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை டாப்சி பன்னு.
அதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஆடுகளம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி தற்போது பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை டாப்சி பன்னு.
இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி அவ்வபோது ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்கள் மற்றும் இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை டாப்சி பன்னு தமிழ் சினிமாவில் இறுதியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான அனபெல்லா சேதுபதி படத்தில் நடித்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து அதிக அளவில் நடிகை டாப்சி பன்னு இந்தி மொழியில் படங்களில் நடிப்பதையே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை டாப்சி பன்னு சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் எமோஷ்னலாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒரு கட்டத்தில் எனது சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நான் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்றும் முத்திரை குத்தப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.