14 Feb 2025
Credit: Instagram
வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி.
தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இடைவேளைக்கு பிறகு இவர் தமிழில் நடித்த கேம் ஓவர் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த அனபெல் சேதுபதி படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது.
தற்போது தொடர்ந்து ஹிந்தி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது காந்தாரி என்ற படம் உருவாகி வருகிறது.
இவர் பிரபல பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ்போவை திருமணம் செய்துள்ளார்.
தக் தக் என்ற படத்தையும் தயாரிக்கவும் செய்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தி ஆகியோரில் உங்களுக்கு பிடித்தவர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பிரதமர் மோடி. நான் இன்னும் இந்தியாவில் வாழ நினைக்கிறேன் கையெடுத்து கும்பிட்டார். அது வைரலாகி வருகிறது.