04 August 2026
Credit: Instagram
தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடியாக இருந்துவருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
இவர்கள் இருவரும் தமிழில் இணைந்து நடித்த முதல் படம்தான் பூவெல்லாம் கேட்டுப்பார் (1999).
இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா முதல் முறையாக இணைந்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகே இவர்களின் நட்பு தொடங்கியது.
பின் இவர்கள் இருவரின் 5 வருட நட்பும் காதலாக மாறியது.
2006ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில், பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த ஜோடிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருக்கிறது.
திருமணத்திற்கு முன் ஜோடியாக படங்களில் நடித்த இவர்கள், திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.
இந்நிலையில் 2026ம் ஆண்டோடு இவர்களின் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்நிலையில் மீண்டும் இவர்களின் ஜோடி திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.