Credit: Instagram
03 November 2026
Credit: Instagram
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சூர்யா.
இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழில் பிரம்மாண்டமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. மேலும் உருவாகவும் உள்ளது.
இறுதியாக இவரின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் மமிதா பைஜுவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக புதிய படங்களிலும் சூர்யா ஒப்பந்தமாகிவந்தார். அதில் விரைவில் வெளியாக தயாராகியுள்ள படம் சீன்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டில் வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் விஜயுடன் நடித்து சினிமாவில் நுழைந்தார்.
இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களிலும், மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார்.
இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருந்தவரும் நிலையில், தற்போதுவரையிலும் ஹீரோவாகவே நடித்துவருகிறார்.
இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் திரைப்படம் சீன். இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார்.
இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
சூர்யா, டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா48, மண்டாடி பட இயக்குநருடன் சூர்யா49, அருண் மாதேஸ்வரனுடன் சூர்யா50 இருக்கும் என கூறப்படுகிறது.