Credit: Instagram
06 october 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராகவும், பிரபலங்கள் கொண்டாடவும் பிரபலமாகவும் இருப்பவர் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மாபெரும் தூணாக இருக்கிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளது.
இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கூலி. இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இதுவரைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கிட்டத்தட்ட 172 படங்கள் வெளியாகியுள்ளது. 173வது உருவாகியுள்ளதுதான் ஜெயிலர் 2.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியாக இந்த ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை தமிழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், சன் பிக்ச்சர் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா மற்றும் வித்யா பாலன் என பலரும் நடித்துள்ளனர்.
மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் கார் டிரைவர் போன்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், மேலும் மார்க்கிங் பேர்ட் சீரிஸ் போலவே இதன் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதற்கு சூப்பர் சுற்ற ரஜினிகாந்த் ரூ 110 முதல் ரூ 225 கோடிகள்வரை சம்பளமாக பெற்றிருப்பார் என கூறப்படுகிறது.