17 Jun 2025

மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்..!

Credit: Freepik

மாதவிடாய் கால உணவில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய 5 உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உணவுகள்

தயிர் கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உங்கள் தசைகளைத் தளர்த்தி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கும்.

தயிர்

நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் புரதமும் நிறைந்துள்ளன. எனவே, இவை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உணவு மீதான அதீத ஆசையைக் கட்டுப்படுத்த உதவும்.

நட்ஸ்

 வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 மாதவிடாய் காலங்களில் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

வாழை

மாதவிடாய் காலங்களில் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் அருந்தினால், மாதவிடாய் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலியை போக்கலாம்.

தலைவலி

உங்களால் அதிகளவில் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றால், இளநீர், காய்கறிச் சாறு அல்லது மோர் வடிவில் அருந்தலாம்.

இளநீர்

பருப்பில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்துள்ளன. உடலில் சீரான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க இவை மிகவும் முக்கியமானவை.

பருப்பு

பருப்பில் உள்ள துத்தநாகம் மாதவிடாய் கால வலிமிகுந்த பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது.

துத்தநாகம்

மாதவிடாய் காலம் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

துரித உணவுகள்