Credit: Instagram

13  November 2026

சாம் விஷால் - ஸ்ரீநிஷாவின் நிச்சயதார்த்தம் போட்டோ கிளிக்ஸ்!

Credit: Instagram

தமிழில் மக்கள் மத்தியில் சின்னத்திரை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஷோ மூலம் அறியப்பட்டவர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்.

இவர்கள் இருவருமே ஆல்பம் பாடல்கள் மற்றும் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளனர். மேலும் நெருங்கிய நண்பர்களும் கூட.

இதில் ஸ்ரீநிஷா ஜெயசீலன் கடந்த 2010ல் விஜய் தொலைக்காட்சியில் வெளியான சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தனர்.

மேலும் சாம் விஷால் கடந்த 2019ம் ஆண்டில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலமாகவே மக்களிடையே பிரபலமானார்.

இதில் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் சாம் விஷாலுடன் - ஸ்ரீநிஷா ஜெயசீலனும் போட்டியாளர்களாக பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்தார். பல பாடல்களை இணைந்தும் பாடியிருந்தனர்.

பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சமீபத்தில் ராமாயணா பார்ட் 1 படத்திலும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அதே போல சாம் விஷாலும் திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுளளார். மேலும் மியூசிக் கான்சர்ட் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருகிறார்.

சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இருவருமே பல ஆண்டுகளாக நட்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், பின் காதலில் விழுந்துள்ளார்.

இவர்கள் இருவருமே 2026 நவம்பர் 11ம் தேதியில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்துள்ளனர். இதன்  கிளிக்ஸ் இணையத்தில் பரவிவருகிறது.