16 September 2026
Credit: Instagram
17 September 2026
Credit: Instagram
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நடிகராக இருப்பவர்தான் சந்தீப் கிஷன்.
இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். கடந்த 2010ம் ஆண்டில் பிரஸ்தானம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார்.
இதன் பிறகு இந்தி படங்களிலும் இவர் நடிக்க தொடங்கினார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் தமிழில் இவருக்கு முதல் அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் யாருடா மகேஷ். 2013ல் வெளியான இப்படத்தை ஆர்.மதன் இயக்கியிருந்தார்.
இதன் பிறகு இவருக்கு தமிழ் மொழியிலும் ரசிகர்கள் குவிய தொடங்கியிருந்தனர் தற்போது தமிழில் படங்கள் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இறுதியாக தமிழில் இவர் நடித்த திரைப்படம் ராயன். தனுஷ் இயக்கி, நடித்த இந்த படத்தில் இவர் முக்கியமான வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதையடுத்து தமிழில் இவர் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா. முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது.
அதை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலூயில், அதில் ஜேசன் சஞ்சய் குறித்து சந்தீப் கிஷன் பகிர்ந்துள்ளார்.
அதில் சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சய் தெலுங்கு திரைப்படங்களின் ரசிகர், என்னை விட அவருக்கு தெலுங்கு வசனங்கள் தெளிவாக தெரியும் என கூறியிருந்தார்.