Credit: Instagram
12 october 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாகவும், தனது நடனத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஸ்ரீலீலா.
இவர் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான கிஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக நாயகியாக நுழைந்தார். இதுவே இவருக்கு முதல் படம்.
இதற்கு முன்பு சில படங்களில் மற்றும் விளம்பரங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.
இவருக்கு தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்த படம் பெல்லி சாண்டாடி. இதில் தனது நடனத்தின் மூலமாக பேமஸானார்.
இதையடுத்து தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். மகேஷ் பாபு முதல் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
தமிழில் இவர் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான பராசக்தி படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார்.
இந்த பராசக்தி படத்தில் ரத்னமாலா என்ற வேடத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.
இதையடுத்து தற்போது அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், ஓம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சினிமா ஒருபக்கம் இருக்க, இன்னும் அவர் தனது மருத்துவப் படிப்பிலும் தீவிரமாக உள்ளாராம். இதற்காக பல படங்களை டிஜெக்ட் செய்துள்ளார்.
அந்த விதத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கியூட் முயல்களுடன் முயல் போல் அவர் கொஞ்சி விளையாடிய புகைபடங்களை பகிர்ந்துள்ளார்.