18 Dec 2025

ஏஐ குறித்து நடிகை ஸ்ரீலீலா வேதனை

Credit: Social Media

சமூக வலைதளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்படும் தவறான கண்டென்ட்களுக்கு ஆதரவு தர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுக்கும், தவறாக பயன்படுத்துவதுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

''வாழ்க்கையை எளிமையாக்கவே தொழில்நுட்ப முன்னேற்றங்கள். அதை சிக்கலாக்க அல்ல.''

''ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக ஊழியர்தான். அவர் கலைத் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட,”

“மகிழ்ச்சியைப் பரப்பும் ஒரு பாதுகாப்பான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஆனால் தற்போது நடப்பவை மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது,”

“இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் தருகிறது. இதே பிரச்னையை பல சக நடிகைகளும் எதிர்கொண்டு வருகிறார்கள். அனைவரின் சார்பாகவும் நான் குரல் கொடுக்கிறேன்.”

“இனி எங்களுடன் நின்று ஆதரவு தருங்கள். இந்த பிரச்னையை காவல் அதிகாரிகள் இனி கையாளுவார்கள்,”

AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா, பிரியங்கா மோகன், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீலீலா தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.