18 July 2026
Credit: Instagram
இளம் கதாநாயகியாகவும், பல இளம் நடிகைகளுக்கு முன் உதாரணமாகவும் இருப்பவர் ஸ்ரீலீலா.
2017ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.
பின் 2019ம் ஆண்டில் கன்னட சினிமாவில் வெளியான கிஸ் என்ற படத்தின் மூலம் நடிகையானார்.
கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமானாலும், இவருக்கு தெலுங்கில் படங்கள் குவிந்தது.
2021ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான பெல்லி சாண்டாடி என்ற படத்தில் தனது நடனத்தின் மூலம் அவர் பிரபலமானார்.
இவர் இதுவரை நந்தமூரி பாலகிருஷ்ணா முதல் மகேஷ் பாபு போன்ற உச்ச பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த பராசக்தி என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது தனுஷின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகும் ஓம் படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் கடை திறப்பு விழாவில் பேசிய அவர், தனது ரசிகர்கள் கொடுக்கும் ஊக்கம் குறித்து பேசியிருக்கிறார்.
தனது ரசிகர்கள் எப்போதும் ஊக்கமளிப்பதாகவும், அவர்களுக்காக தரமான படங்கள் மற்றும் எதையும் செய்ய தயார் என ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.