Credit: Instagram
21 November 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவரும் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன்.
இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான மற்றும் பெரிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது.
இறுதியாக தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் பராசக்தி. இதை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.
பராசக்தி திரைப்படமானது உண்மையான கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்த படத்திற்கு பிறகு பேக் டூ பேக் சிவகார்த்திகேயன், சேயோன் மற்றும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் SK27 போன்ற படங்களில் நடிக்கிறார்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுவரும் சேயோன் படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.
இதனால் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுவரும் கேங்ஸ்டர் படத்தில் தீவிரமாக இருக்கிறார் SK.
இரு திரைப்படங்களும் வரும் 2027ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக தயாரிக்கப்பட்டுவருகிறது. இது அவருக்கு வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த புதிய திரைப்படத்திற்கான கதைகளையும் கேட்டுவருகிறாராம்.
சிவகார்த்திகேயனின் 28வது திரைப்படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது.