16 September 2026

Credit: Instagram

16 September 2026

சிவகார்த்திகேயனின் 27வது படத்தின் இயக்குநர் இவரா?

Credit: Instagram

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும்,. போட்டியாளராகவும் இருந்த இவர் பின் சினிமாவின் மீதுள்ள ஆசையினால் நடிகரானார்.

கடந்த 2012ம் ஆண்டில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தின் மூலமாக  நடிகராக நுழைந்தார்.

இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக, தொடர்ந்து திரைப்படங்களிலும் நாயகனாக நடிக்க தொடங்கியிருந்தார்.

இதையடுத்து இவருக்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலத்தை கொடுத்த திரைப்படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இது அவருக்கு பிரம்மாண்ட ஹிட்டை கொடுத்தது.

இதன் பிறகு காக்கி சட்டை, மான் கராத்தே போன்ற படங்களில் நடித்து மேலும் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தார்.

மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி. இதில் செழியன் என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்க்கப்பட்டார்.

தற்போது இவரின் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம் சேயோன். இதில் சிவகார்த்திகேயன் சிறப்பான ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு பிறகு தனது 27வது திரைப்படத்தில் எந்த இயக்குநருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 27வது படத்தில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைகிறாராம். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.