14 July 2025
Credit: Freepik
கோடை மற்றும் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் எறும்புகள் படையெடுக்க தொடங்கும்.
எறும்புகளை விரட்ட உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிக மிக முக்கியம்.
எறும்புகள் வரும் இடத்தில் எலுமிச்சை சாற்றையோ அல்லது அதன் தோல்களையோ வைக்கலாம்.
எறும்புகளை விரட்ட புதினா எண்ணெய் அல்லது வெள்ளை வினிகரையும் பயன்படுத்தலாம்.
எறும்புகள் வராமல் இருக்க உணவு பொருட்களை எப்போதும் மூடிய கொள்கலன்களுக்கு வைக்க வேண்டும்.
அதேபோல், சர்க்கரை மற்றும் இனிப்பு பொருட்களை திறந்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களில் உள்ள சிறிய விரிசல்களை அடைப்பது எறும்புகள் வராமல் தடுக்கும்.
குப்பை தொட்டியை தினமும் சுத்தம் செய்து, மூடி போட்டு மூடி வைப்பது முக்கியம்.
எறும்புகளில் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், எறும்பு சாக்பீஸ் மற்றும் எறும்பு பொடிகளை பயன்படுத்தலாம்.
இந்த எளிய வழிமுறைகள் உங்கள் வீட்டை எறும்புகளிடம் இருந்து பாதுகாக்கும்.