05 September 2026
Credit: Instagram
நடிகர் சிலம்பரசன் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் தமிழில் உச்ச நடிகர்.
80ஸ் மற்றும் 90ஸ் சினிமாவில் பிரபலமானவரான டி.ராஜேந்தரின் மகன் என்ற நிலையில், தனது 1 வயதிலே சினிமாவில் நுழைந்தபவர் இவர்.
அதன் பிறகு சினிமாவில், தனது தந்தை இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் நெருக்கமானார்.
பின் டி.ராஜேந்தரின் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, நடிகை சார்மிக்கு ஜோடியானார்.
இந்த படமானது இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது. மேலும் தற்போது நடிகர் சிலம்பாசனின் நடிப்பில் இதுவரை மொத்தம் 48 படங்களில் நடித்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் சிலம்பரசன் உடல் எடை அதிகமாகி, வித்தியாசமாக காட்சியளித்தார். பின் தனது படங்களுக்காக எடையை குறைத்தார்.
அந்த விரோதத்தில், எடையை குறைப்பதற்காக தான் கையாண்ட விஷயங்கள் குறித்து நேர்காணல்களில் பேசியிருக்கிறார்.
தற்போது சிலம்பரசன் முழுவதுமாக சைவ உணவிற்கு மாறியுள்ளாராம். அசைவை சாப்பிடுவதை தவிர்த்துள்ளார் என அவரே தெரிவித்திருந்தார்.
தனது உணவில் சோறு-ஐ விட காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வதாகவும், தினமும் மூச்சி பயிற்சி என உடலை பராமரிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தற்போது தனது உடலை ஒரே எடையில் பராமரிப்பதாகவும், அசைவ உணவு மற்றும் ஃபாஸ்ட் ஃபுடடை சாப்பிடுவதை தவிர்த்துள்ளாராம்.