06 July 2026
Credit: Instagram
கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும், தனது சிறுவயதிலிருந்து நடிப்பின் மீது ஆர்வம் காட்டியவர் ஸ்ருதிஹாசன்.
இவர் 2009ம் ஆண்டிலே லக் என்ற இந்தி படத்தின் மூலமாக கதநாயகியாக அறிமுகமானார்.
இந்தி சினிமாவிற்கு பின், தெலுங்கிலும் அனகனக ஓ தீருடு என்ற படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார்.
பின் தொடர்ந்து நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர், சூர்யாவின் 7-ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் களமிறங்கினார்.
சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த இவருக்கு, மேலும் ரசிகர்களிடையே வரவேற்பை கொடுத்த படம் தனுஷின் 3 தான்.
இவ்வாறு தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார்.
இவர் இறுதியாக தமிழில் கூலி (2025) என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார்.
மேலும் தற்போது இவர் ட்ரெயின் மற்றும் விக்ரமின் புது படம் ஒன்றிலும் நாயகியாக நடிக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை யார் என தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை ஸ்ரீதேவிதான் என அவர் கூறியிருக்கிறார்.