Credit: Instagram

25   November 2026

ஸ்ருதிஹாசனின் புதிய திரைப்படத்தின் இயக்குநர் இவர்தான்!

Credit: Instagram

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளியான 7 ஆம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியானவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக, தனது தந்தை கமல் நடித்திருந்த ஹே ராம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதன் பிறகு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன், இந்தியில் லக் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார்.

இதன் பிறகு தெலுங்கு, தமிழ் என பேக் டூ பேக் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். தமிழில் முதல் படம் இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தது.

இதன் பிறகு இவருக்கு தமிழில் எதிர்பாராத மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் 3. இதில் தனுஷுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் பிறகு கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கும் மேல் ஆகியும், இந்த கூட்டணியில் அடுத்ததாக படங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் படங்களில் பணியாற்றுவதை விட தெலுங்கு சினிமாவில் பாடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

இறுதியாக துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக்க தாரா என்ற திரைப்படத்தில், முக்கியமான வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

தமிழில் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் கீழ், 2023ல் அஸ்வின்ஸ் என்ற படத்தை இயக்கிய தருண் தேஜா இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.