18 AUG 2025
Credit: Getty
அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில், ஸ்மார்ட்போன்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு அம்சம் வந்துவிட்டது.
இந்த அம்சத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் தங்களது அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
அனைத்து தரப்பினர்
இந்த நிலையில், தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தும் முதியவர்கள் இந்த சில விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. அவை உண்மையானவை போலவே தோற்றமளிக்கின்றன.
அவை சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன. அதனை பார்க்கும் பலரும், அவற்றை உண்மை என நம்பி விடுகின்றனர். இதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் உறுவாகிறது.
உண்மை எது, செயற்கை நுண்ணறிவு அம்சம் எதுவென எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவு மிகவும் துல்லியமாக இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் செயல்படுகிறது.
இந்த சூழலில் வேறு ஒருவரின் முகத்தை பயன்படுத்தி முதியவர்களிடம் பணம் பரிக்கும் மோசடிகள் நடைபெறுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
நடைபெறாத ஒரு சம்பவத்தை செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் உண்மையான சம்பவம் போல சித்தரித்து அதன் மூலமும் மோசடிகளின் நடைபெறுகின்றனர்.
எது செயற்கை நுண்ணறிவு அம்சம் எது உண்மை என தெரிந்துக்கொள்ள தெரியாதவர்கள் இந்த சிக்கலில் சிக்கொக்கொள்கின்றனர். இதில் பெரும்பாலும் முதியவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
எனவே செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தும்போது என்ன என்ன தகவல்களை வழங்குகிறோம், நமக்கு வந்துள்ள தகவல், புகைப்படம், வீடியோ உண்மைதானா என்பதை முதியவர்கள் உறுதி செய்ய வேண்டும்.