Credit: Instagram

09 october 2026

நிறைமாத நிலவே வா வா.. பேபி பம்ப் உடன் சமந்தா கிளிக்ஸ்!

Credit: Instagram

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவ மத்தியிலும் மிகவும் பிரபலமான நாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சமந்தா ரூத் பிரபு.

தெலுங்கில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான Ye Maaya Chesave என்ற படத்தின் மூலமாக நாயாகியாக நுழைந்தார்.

தெலுங்கில் இவருக்கு இந்த திரைப்படமானது மாபெரும் வரவேற்பை கொடுக்க, பின் தமிழ் சினிமாவிலும் நாயகியானார்.

தமிழில் முதலில் நாயகியாக நடித்த திரைப்படம்தான் பானா காத்தாடி. இதில் நடிகர்  அதர்வாவுக்கு ஜோடியாக இணைந்தார்.

இதற்க்கு பின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நாயகியாக வலம்வந்தார் சமந்தா. அதில் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்.

இவர் தமிழில் முதலமைச்சர் விஜய், தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார்.

அதில் தனது லக்கி சார்ம் மற்றும் தனக்கு பிடித்த நடிகர் முதல்வர் விஜய் என பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார்.

இறுதியாக இவரின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மா இன்டி பங்காரம். இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இதன் பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை சமந்தா, ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்திருந்தார். இது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது கர்ப்பகாலத்தின் இறுதி மாதமானது நெருங்கும் நிலையில், தனது பேபி பம்ப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.