Credit: Instagram
10 November 2026
Credit: Instagram
தென்னிந்திய திரைத்துறை வட்டாரங்களில் முன்னணி ஸ்டார் நாயாகியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு.
இவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
அதையடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி முதல் இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பல்வேறு மற்றும் பிரம்மாண்ட இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் இவர் அறிமுகமானாலும், இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும்.
இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகி சமவந்தவுக்கு சிறப்பான வரவேற்பை மக்கள் மத்தியில் கொடுத்துள்ளது.
இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியாகியிருந்த திரைப்படம் மா இன்டி பங்காரம். இதை பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார்.
சமந்தாவுக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகியாக நடிக்க இந்த திரைப்படம் கிடைத்திருந்த நிலையில், ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
நடிகை சமந்தா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், சினிமா மற்றும் படங்களில் இருந்து ஓய்வில் உள்ளார்.
இவர் தற்போது சின்னத்திரையில் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் என்ற குக்கிங் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் இன்னும் நெருக்கத்தில் உள்ளார்.
மேலும் இவர் நிறைமாதத்தில் இருக்கும் நிலையில், தான் ஓய்வெடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், எனது மகப்பேறு கால புகைப்படத் தொகுப்பாகக் கருதுங்கள் என கூறியுள்ளார்.