11 September 2026

பேபி ஃபம்புடன் சமந்தா இருக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Credit: Instagram

தெலுங்கு சினிமாவில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான Ye Maaya Chesave என்ற படத்தின் மூலமாக நாயகியாக நுழைந்தார்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக் படமாக இது அமைந்திருந்த நிலையில், இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது பானா காத்தாடி. இதில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் பிறகு இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் தமிழில் இவருக்கு மாபெரும் வரவேற்பும் இருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டில் வெளியான குஷி என்ற திரைப்படத்திற்கு பின், இவர் சில உடல்நிலை பிரச்சனையின் காரணமாக படங்களிலிருந்து பிரேக் எடுத்தார்.

இதன் பின் மீண்டும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் பின் சினிமாவில் நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்த திரைப்படம் மா இன்டி பங்காரம்.

இதை பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா தயாரித்திருந்தார். இது கிட்டத்தட்ட ரூ 100 வசூலை பெற்றிருந்தது.

இவர் கடந்த 2025ம் ஆண்டில் டிசம்பர் 1ம் தேதியில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ் நிதிமோருவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளான நிலையில், மா இன்டி பங்காரம் படத்தின் வெற்றிவிழாவில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், கிளாமராக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.