31 Jan 2025
Credit: Instagram
தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் தொடர் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார் சமந்தா.
அந்த தொடரின் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிதிமோருவை அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர் மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை சமந்தாவின் சூப்பர் குட் படங்களில் ஒன்றான ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
இந்த நிலையில் சமந்தா தனது பெயரை மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி தனது கணவரின் குடும்ப பெயரான நிதிமோருவை தனது பெயருக்கு பின்னால் சேர்க்க முடிவெடுத்துள்ளாராம்.
அவரது நடிப்பில் அடுத்து வெளியாகும் மா இண்டி பங்காரம் படத்தில் டைட்டில் கார்டில் சமந்தா நிதிமோரு என இடம் பெறும் என கூறப்படுகிறது.
முன்னதாக நாக சைதன்யாவின் திருமணம் செய்த பிறகு அவரது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றியிருந்தார்.
பின்னர் விவகாரத்துக்கு பிறகு சமந்தா என்ற பெயரிலேயே நடித்து வருகிறார்.