20 Jan 2026
Credit: Instagram
'கேஜிஎஃப்' திரைப்படம் மூலம் நாடு தழுவிய புகழ் பெற்ற நடிகரானார் யாஷ்.
தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
டாக்ஸிக் படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
டாக்ஸிக் படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த ஆபாசக் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் படத்திற்காக நயன்தாராவுக்கு ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மற்ற நடிகைகளின் சம்பள விவரங்களும் வெளியாகி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதன்படி, கியாரா அத்வானி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், நடிகைகள் தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோருக்கு தலா ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தில் நடிகைகளின் சம்பளம் கணிசமாக அதிகரித்திருப்பது மற்ற தயாரிப்பாளர்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.