Credit: Instagram
26 october 2026
Credit: Instagram
ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் மக்களால் ரசிக்கப்பட்டுவரும் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் சாய் பல்லவி.
மலையாள திரையுலகின் மூலமாக கதாநாயகியாக இவருக்கு முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் அமைந்தது பிரேமம். இதில் நிவின் பாலியுடன் இணைந்திருந்தார்.
ஜார்ஜியாவில் தனது மருத்துவப்படிப்பை தொடர்ந்துவந்த இவருக்கு, இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் முதல் சினிமா வாய்ப்பை கொடுத்தார்.
பிரேமம் படத்திற்கு பின் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார்.
தமிழில் தனுஷின் மாரி 2 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதில் அவர் நடித்திருந்த ஆனந்தி என்ற வேடம் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது இவர் பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்துவரும் நிலையில், பான் இந்திய மொழி படங்களிலும் நடிக்கிறார்.
இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ரன்பீர் கபூரின் ராமாயணா பார்ட் 1.
இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி தேவி சீதையாக நடித்துள்ளார். இந்த படம் இந்தியில் இவருக்கு 2வது திரைப்படம்.
மேலும் தமிழில் இவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் ஓம் படத்தில் நடிக்கிறார்.
ஓம் திரைப்படத்தில் சாய் பல்லவி நடிகையாக இல்லாமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நந்தினி ரெட்டி என்ற விசாரணை போலீசாக அவர் நடித்துள்ளாராம்.