10 July 2026
Credit: Instagram
மலையாளத்தில் தொடங்கி, தற்போது இந்திய சினிமா வரையிலும் சிறப்பான நாயகியாக புகழப்பட்டுவருபவர் நடிகை சாய் பல்லவி.
இவர் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ரவி மோகன் நடித்த, தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
தாம் தூம் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த இவர், அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகலாமானர்.
பிரேமம் படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பியூட்டி க்ரஷ்-ஆகவே மாறிவிட்டார்.
மேலும் தொடர்ந்து மலையாள மொழியில் கதாநாயகியாக நடித்துவந்த இவருக்கு, தமிழில் லீட் நாயகியாக அறிமுகமான படம் மாரி 2.
தமிழில் ரௌடி பேபியாக பின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, சூர்யா முதல் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்ளுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர், இந்தியில் ஏக் தின் படத்தின் மூலம் நுழைந்துள்ளார்.
இதையடுத்து ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராமாயணா படத்தில் சீதையாகவும் நடித்துவருகிறார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்காதது ஏன் என தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவி, முத்த காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்காமல் இருப்பது தனது தனிப்பட்ட தொழில்முறை விருப்பம் என கூறியுள்ளார்.