Credit: Instagram
29 September 2026
Credit: Instagram
மலையாளம் தனது திரை வாழ்க்கையை தொடங்கி, தற்போது பான் இந்தியா வரை தனது பிரபலத்தின் மிதப்பவர் சாய் பல்லவி.
தனது சிறுவயதிலிருந்து இவர் நடிகையாகவேண்டும் என்றார் ஆசை கொண்டவர் இல்லை, ஆனால் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார்,குறிப்பாக ரவி மோகனின் தாம் தூம் படத்திலும் ஒரு சிறுமி வேடத்தில் நடித்தார்.
பின் தனது படிப்பின் மீது ஆர்வம் கொண்ட சாய் பல்லவி, ஜார்ஜியாவில் தனது மருத்துவப் படிப்பை மேற்கொண்டார்.
இந்த படிப்பின்போதே இவருக்கு சினிமாவில் நடிகையாக நடிக்கும் முதல் வாய்ப்பை கொடுத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்.
கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தில், மலர் என்ற வேடத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார். இதுவே முதல் பிரபலத்தை கொடுத்தது.
இதற்கு பின் தெலுங்கில் நடிகையாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதில் முதல் படமாக அமைந்தது வருண் தேஜாவுடன் நடித்த பிடா.
தெலுங்கு சினிமாவில் நடித்து பின் மூன்றாவதாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார்.
ஏக் தின் என்ற திரைப்படத்தின் மூலமாக இந்தியில் நாயகியாக அறிமுகமான நிலையில், ராமாயணா என்ற படத்தில் சீதையாகவும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டியில் பேசிய சாய் பல்லவி, ராமாயணா படத்தின் ஷூட்டிங்கில் முதல் முறையாக ரன்பீரை ராமனாக பார்க்கும்போது மிகவும் வியந்ததாக தெரிவித்துள்ளார்.