Credit: Instagram

28  November 2026

அந்த படத்தில் இணைகிறதா கென் கருணாஸ் - சாய் அப்யங்கர் கூட்டணி?

Credit: Instagram

தென்னிந்திய திரைத்துறையில் இளம் இசையமைப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பேமசானவராக இருந்துவருபவர் சாய் அப்யங்கர்.

இவர் தமிழில் கட்சி சேர என்ற ஆல்பம் பாடல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், அதை தொடர்ந்து இசையமைப்பாளராக நுழைந்தார்.

கடந்த 2024ம் ஆண்டில் கட்சி சேர, ஆச கூட என்ற இரு பேக் டூ பேக் ஆல்பம் பாடல்களை கொடுத்திருந்த நிலையில், சிறப்பாக வரவேற்கப்பட்டார்.

அதை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

ஆனால் சினிமாவில் இவருக்கு முதல் ரிலீஸ் திரைப்படமாக அமைந்தது பல்டி. மலையாள சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தார்.

இந்த படத்திற்கு பின் தமிழில் இவரின் இசையில் முதல் திரைப்படமாக அமைந்தது டியூட். பிரதீப் ரங்கநாதன் இதில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதன் பிறகு முதல் பிரம்மண்ட பட்ஜெட் திரைப்படமாக அமைந்தது சூர்யாவின், கருப்பு திரைப்படம். இதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பான வரவேற்பை பெற்றது.

இதன் பிறகு இறுதியாக இவர், தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் வெளியான ஓ.எம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இதனை பிறகு சூர்யா முதல் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் இவர் கென் கருணாஸின் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்துள்ளாராம் அது வெற்றிமாறன் படமா அல்லது செல்ல அய்யாவு படமான என பார்க்கலாம்.