22 Apr 2025

பாட்டில் பால் கொடுக்கும் பாதுகாப்பான முறைகள்..!

Credit: Getty

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் சிறந்தது, ஆனால் சில நேரங்களில் பாட்டில் பால் தேவைப்படும். அப்போது சரியான முறையில் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

அவசியம்

குழந்தையை பால் கொடுக்கும்போது தலை உயரமாக வைத்திருக்க வேண்டும். படுக்க வைத்து கொடுத்தால் மூச்சுத்திணறல் அபாயம் உள்ளது.

நிலை

அம்மா நேராக உட்கார்ந்து குழந்தையை சீராக பிடிக்க வேண்டும். குழந்தை வசதியாகவும் சாயாமல் இருக்க வேண்டும்.

பிடிப்பு

பாட்டில் நிப்பிள் முழுவதும் குழந்தையின் வாயில் செல்ல வேண்டும். இல்லையெனில் காற்று உள்ளே சென்று வயிற்று பிரச்சனை வரும்.

நிப்பிள்

குழந்தை பாட்டிலுக்கு பழக சில நாட்கள் ஆகலாம். அதனால் அவசரப்படாமல் மெதுவாக பழக்க வேண்டும்.

பழக்கம்

பால் கொடுக்கும் போது இடைவெளி விடுவது அவசியம். அதிகமாக குடிப்பதை தவிர்க்க இது உதவும்.

இடைவெளி

பால் வேகமாகவோ மெதுவாகவோ வரக்கூடாது. சீரான ஓட்டத்தில் வருகிறதா கவனிக்க வேண்டும்.

ஓட்டம்

குழந்தை இடையில் ஓய்வு எடுத்து குடிக்க வேண்டும். இது ஜீரணத்திற்கும் பாதுகாப்புக்கும் உதவும்.

ஓய்வு

பால் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். கொடுக்க முன் கையில் சோதித்து பார்க்க வேண்டும்.

வெப்பம்

பாட்டில் மற்றும் நிப்பிள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கொதிநீரில் கழுவி உலர்த்துவது பாதுகாப்பானது.

சுத்தம்