10 August 2026
Credit: Instagram
கன்னட சினிமாவின் மூலம் நாயகியாக நுழைந்து, தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ருக்மிணி வசந்த்.
இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடிக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டில் வெளியான பீர்பல் ட்ரைலாஜி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
மேலும் நாயகியாக இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம் சப்த சாகரடாச்சே எல்லோர் சைட் ஏ மற்றும் சைட் பி.
2023ம் ஆண்டில் ரக்ஷித் செட்டிக்கு ஜோடியாக இவர் நடித்த இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின் தெலுங்கில் அப்புடு இப்புடு எப்புடு என்ற படத்தின் மூலம் நுழைந்தார்.
இந்த வரிசையில் தமிழில் அறிமுக படமாக அமைந்தது ஏஸ், இதில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.
இதற்கு பின் மதராஸி என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வரவேற்பை பெற்றார்.
மேலும் இவர் டாக்ஸிக் மற்றும் டிராகன் போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த வரிசையில் மலையாளத்தில் நாயகியாக நுழைந்ததுள்ளார். நிவின் பாலியின் 51-வது படத்தில் அவருக்கு ஜோடியாக இணைகிறார்.