14 SEP 2026

வீதியில் இறங்கி போராடிய ரோபோக்கள் : காரணம் என்ன?

Credit: Getty

உலகம் நாளுக்கு நாள் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளை சந்தித்து வருகிறது. அந்த கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கும் விதமாக உள்ளன. 

தொழில்நுட்பம்

மனிதர்களுக்கு நிகராக ரோபோக்களும், செயற்கை நுண்ணறிவு கருவிகளும் வேலை செய்ய தொடங்கிவிட்டன. இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கம்

ஆனால், தற்போது தொழில்நுட்பமே, தொழில்நுட்பத்திற்கு எதிராக எழுந்துள்ளது. அது உலகத்தையே திரும்பி பார்க்க செய்துள்ளது. 

முக்கிய நிகழ்வு

அதாவது, ரோபோக்களும் மனிதர்களை போலவே தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளன. இது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போராட்டம்

போலாந்தின், வார்சா பகுதியில் டிஜிட்டல் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு வெளியே சுமார் 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் ஒன்றினைந்து போராட்டத்தை நடத்தியுள்ளன. 

ரோபோக்கள்

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமும் வளர்ச்சியை சந்தித்துள்ளது.

ஏஐ அம்சம்

இந்த ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் ஏராளமான மனிதர்கள் தங்களது பணியை இழந்து வருகின்றனர். 

பணி இழப்பு

இவ்வாறு மனிதர்களின் வேலை இழப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை கண்டித்தே இந்த போராட்ட மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வேலை இழப்பு

டெமாக்ரடிசம் என்ற அமைப்பு தான் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. விழுப்புணர்வுக்காக அந்த அமைப்பு இதனை செய்துள்ளது. 

அமைப்பு

ஏஐ, ரோபோ மயமாக்கல் மனிதர்களின் வேலைவாய்ப்பு சந்தையை எத்தகைய தாக்கங்களுக்கு உள்ளாக்குகின்றன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

விழிப்புணர்வு