Credit: Instagram

06 November 2026

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லியாக நடிக்க ரெஜினா வாங்கிய சம்பள விவரம்!

Credit: Instagram

தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களில் நாயகியகவும், முக்கியமான வேடங்களில் நடிக்கும் நடிகையாகவும் இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா.

இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளிலும் படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இவர் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகியிருந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் நுழைந்தார்.

இந்த படத்தின் வரவேற்புக்கு பிறகு பேக் டூ பேக் படங்களில் நாயகியாகவே நடிக்க தொடங்கியிருந்தார் ரெஜினா கசாண்ட்ரா.

இவர் தெலுங்கில் சிவா மனசுல ஸ்ருதி என்ற, தமிழில் வெளியான SMS ரீமேக் படத்தின் மூலமாக கதாநாயகியாக மக்களிடையே அறிமுகமானார்.

இதன் பிறகு இவர் கன்னடத்தில் சூரியகாந்தி, இந்தியில் ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ் நடிகை என்ற நிலையில், படங்களில் நடிகையாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், முக்கியமான வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜூனுடன் இணைந்து நெகட்டிவ் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார்.

மேலும் இவர் முழுமையாக வில்லியாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இதில் பைரா என்ற நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு நடிகை ரெஜினா கசாண்ட்ரா, ரூ 15. கோடி முதல் ரூ 2 கோடிகள் வரை சம்பளமாக பெற்றுள்ளாராம்.