06 July 2025
Credit: Freepik
தினமும் பலருக்கும் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். இதற்கான காரணங்கள் இவையாக இருக்கலாம்.
பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் உள்ள உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
நோரோவைரஸ் மற்றும் ரோட்டோ வைரஸ் போன்றவை வயிறு மற்றும் குடல்களை பாதித்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
சால்மோனெல்லா, ஈ. கோலை போன்ற பாக்டீரியாக்கள் அசுத்தமான உணவு மூலம் உடலுக்குள் புகுந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
கெட்டுப்போன உணவையோ அல்லது சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படாத உணவையோ உண்பது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
சிலருக்கு பால், குளூட்டன் அல்லது சில குறிப்பிட்ட உணவுகள் ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
சில நுண்ணுயிட் எதிர்ப்பிகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கும். இது செரிமான அமைப்பை சீர்குலைத்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்ஜி போன்ற பிரச்சனைகளாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
மன அழுத்தம், பயம் மற்றும் பதட்டம் போன்ற நிலைகளும் சிலருக்கு செரிமான அமைப்பை பாதித்து, வயிற்றுப்போக்கு வழிவகுக்கும்.
காரமான, எண்ணெய் நிறைந்த உணவுகள் உட்கொள்வது வயிற்று கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.