24 October 2026

அந்த மாதிரியான உடைகளை அணிவதில் எனக்கு விருப்பமில்லை

Credit: Instagram

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நடிப்பு பயணத்தை முதன்முதலில் கன்னட சினிமாவில்தான் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது தெலுங்கு பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார்.

அதிக அளவில் தெலுங்கு மொழியில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தாலும் அவ்வபோது பான் இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சினிமாவில் நாயகன்களுக்கு ஜோடியாக மட்டும் அல்லாமல் அவ்வபோது நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார்.

இறுதியாக நடிகை ராஷ்மிகா மந்தனா அவரது கணவர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த ரணபாலி படம் திரையரங்குகளில் வெளியானது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கமர்ஷியல் படங்களில் நடிகர்கள் விருப்பமே இல்லை என்றாலும் சில உடைகளை அணியவேண்டியதாக தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் ஒரு மனிதனின் தனிப்பட்ட எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ராஷ்மிகா.

எனக்கு உடன்பாடில்லாத சில விஷயங்கள் உள்ளன. சில கதாபாத்திரங்களுக்கு பிகினி போன்ற குறிப்பிட்ட உடைகளை அணிய வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

உடல் அதிகமாகத் தெரியும் வகையிலான உடைகளை அணிவதில் எனக்கு விருப்பமில்லை. நான் அத்தகைய குணம் கொண்டவள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.