Credit: Instagram

21 october 2026

ராமாயணத்தில் சூர்பனகையாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Credit: Instagram

தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகைகளில் ஒருவராக சினிமாவில் தனது நடிப்பை வெளிப்படுத்திவருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தனது சிறுயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நிலையில், சில படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கதாநாயகியாக இவருக்கு முதலில் அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் கில்லி (2009) என்ற கன்னட படம்.

கன்னட சினிமாவின் மூலமாக இவர் நுழைந்த நிலையில், அதன் பிறகு தெலுங்கில் கேரட்டம் என்ற படத்தின் மூலமாக தெலுங்கிலும் நுழைந்தார்.

இவ்வாறு தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ரகுல் நடித்த நிலையில், தமிழில் முதல் படமாக தடையற தாக்க என்ற படம் அமைந்தது.

இந்த படமானது இவருக்கு முதல் தமிழ் அறிமுகத்தை கொடுத்த நிலையில், ரகுல் சூர்யா முதல் கார்த்தி வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க தொடங்கியிருந்தார்.

அந்த விதத்தில் இவர் இறுதியாக தமிழில் நடித்திருந்த திரைப்படம் இந்தியன் 2. இதில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பின் இந்தி சினிமா திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில்  கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் பான் இந்திய படமான ராமாயணாவில் சூர்பனகையாக இவர் நடித்துள்ள நிலையில், இவரின் வேடத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ராமாயணா படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிப்பதற்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கிட்டத்தட்ட ரூ 1 கோடி முதல் ரூ 2 கோடிகள் வரை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.