24 Feb 2025
Credit: Instagram
அருண் விஜய்யின் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
அதனைத் தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
பின்னர் சிறிய இடைவேளைக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து கார்த்தியின் தேவ். சூர்யாவுடன் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த அயலான் நீண்ட இடைவேளைக்கு பிறகு 2024 ஆம் ஆண்டு வெளியானது.
கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார்.
சோகமான காட்சிகளில் 1, 2, 3, 4 சொல்லி நடிக்கிறார்கள் என மாளவிகா மோகனனின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
நாம் பணிபுரியும் திரையுலகிற்கும் தங்களை வரவேற்கும் ரசிகர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
தெரியாத மொழியில் நடித்தால் 1,2,3,4 அல்லது ABCD சொல்லி நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.