14 Dec 2025
Credit: Social Media
ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12 அன்று படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
திரையுலகில் ரஜினியின் 25வது ஆண்டில் வெளியான இந்தப் படம், அவரது 50வது ஆண்டில் மீண்டும் வெளியாகியிருக்கிறது.
நீலாம்பரி கதாப்பாத்திரத்தை பொன்னியின் செல்வன் நந்தினி கதாப்பாத்திரத்தை அடிப்படையாக வைத்து ரஜினி உருவாக்கினார்.
கடந்த 1999 ஆண்டுக்கு பிறகு இந்தப் படம் மீண்டும் ரீரிலிஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை ரஜினிகாந்த்தே கதை எழுதி தயாரித்திருந்தார்.
தெலுங்கில் நரசிம்மா என்ற பெயரில் வெளியாகி அங்கும் பெரும் வெற்றிபெற்றது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு கடைசி படங்களில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.
25 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்தப் படம் 2கே கிட்ஸ்களையும் கவர்ந்துள்ளது.
இந்தப் படம் வெளியான 2 நாட்களில் ரூ. 8.35 கோடி வசூலித்திருக்கிறது.
கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் தள்ளிப்போனது இந்தப் படத்துக்கு அட்வான்டேஜாக அமைந்தது.