06  September 2026

தனுஷ் சார் அரசியலுக்கு வாறாரா? ரஜிஷா விஜயனின் ரியாக்ஷன்!

Credit: Instagram

மலையாளம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து அசத்திவருபவர் ரஜிஷா விஜயன்.

கடந்த 2016ம் ஆண்டில் கலித் ரஹ்மத் இயக்கத்தில், அனுராக கரைக்கி வெல்லம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக நுழைந்தார். இது அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றது.

 மேலும் இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது கர்ணன், இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரவேற்பை பெற்றார்.

இதன் பிறகு, சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இதன் பின் தமிழில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து கார்த்தியின் சர்தார் 1 படத்தில் இணைந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இதில் இந்திராணி வேடத்தில் பிரபலமானார்.

மேலும் தெலுங்கில் அறிமுக படமாக அமைந்தது ராமரோ ஆன் டியூடி. இதில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் இறுதியாக தமிழில் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்திருந்தார். இதில் துருவ் விக்ரமுக்கு அக்காவாக நடித்திருந்தார்.

மேலும் 2026ல் இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் படம்தான் சர்தார் 2. இதில் சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியான வேடத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நேர்காணலில், தொகுப்பாளர் தனுஷின் அரசியல் நுழைவு கேள்வி குறித்து அவரின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொகுப்பாளர் தனுஷ் அரசியலில் வருகிறார் தெரியுமா? என கேட்ட நிலையில், ரஜிஷா விஜயன் எனக்கு தெரியாது என ரியாக்ட் செய்துள்ளார்.