Credit: Instagram

03 october 2026

ஜெயிலர் 2 படத்தின் பட்ஜெட் இவ்ளவா? - விவரங்கள் இதோ!

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கொண்டாடவும் நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் இவர் இதுவரை மொத்தம் 172 படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 173வது திரைப்படம்தான் ஜெயிலர் 2. இதை சன் பிக்ச்சர் தயாரித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1ன் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாகியுள்ள 2வது பாகம்தான் ஜெயிலர் 2.

இப்படத்தை தமிழ் பிரபலமான இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இது அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 5வது படமாகும்.

இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ள நிலையில், அப்படத்திற்கு பான் இந்திய பிரபலமான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஜெயிலர் 2 படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது.

இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, சிவராஜ்குமார், வித்யாபாலன், மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2026 ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

அந்த விதத்தில் இப்படமானது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பட்ஜெட் ரூ 250 முதல் ரூ 350 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.